செய்தி: (7.5.2018)
புது மலேசியாவை காண்போம்.
இந்த
பதினான்காம் பொதுத்தேர்தலில் மக்கள் ஒரு பக்கம், பண வெறியர்கள், ஊழல்வாதிகள்,
அநீதிக்கு முதல் இடம் தருவோர், அதிகார
வெறியர்கள் போன்றவர்களை உள்ளடக்கிய
சக்தி மற்றொரு பக்கம்.
இந்த இரு தரப்பினருக்கும் இடையே நடக்கும்
போர்தான் இந்தப் பொதுத்தேர்தல், குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால்
நீதிக்கும் அநீதிக்கும் இடையில்
நடக்கும் போராட்டமாகும். மக்களைப்
பிரதிநிதிப்பது நம்பிக்கை கூட்டணி. நீதியை
பிரதிநிதிப்பது நம்பிக்கை கூட்டணி.
பணத்தை,
அகங்காரத்தை, அதிகார வெறியை அநீதியை,
அடக்குமுறையை, அதிகார துஷ்பிரயோகம்
போன்ற சக்திகளைப் பிரதிநிதிப்பது தேசிய முன்னணி..
இப்பொழுது
நடப்பது அறப்போர். மக்கள்
வெற்றிகண்டாக வேண்டும். மக்களின்
வெற்றி உறுதியாகிவிட்டது. அதை உணர்ந்துவிட்ட தேசிய முன்னணி கீழ்த்தரமான
நடவடிக்கைகளில் இறங்கிவிட்டதை காணலாம்.
தேர்தல்
தொகுதிகளில் வாக்காளர்களை வேறு வாக்குச்சாவடிக்கு மாற்றியது.
இப்படிச் செய்ததால் வாக்காளர்களுக்கு தொல்லை
தருவது. இப்படிப்பட்ட சூழ்ச்சியால்
வாக்காளர்கள் வாக்களிப்பதை தடுப்பது.
வெளிநாடுகளில்
இருந்து வாக்களிக்க வரும் மலேசியர்களைத்
தடுக்கும் நோக்கத்தோடு பல இடைஞ்சல்கள் ஏற்படுத்துவது
போன்ற நடவடிக்கைகள் ஜனநாயகத்திற்குப் புறம்பானவை.
தேர்தல் சட்டத்திற்கு முரணானவை. வாக்களிக்கும்
உரிமையைத் தடுக்கும் நோக்கத்தை
வெளிப்படுத்துகிறது. தோல்வி விளிம்பில்
ஊசலாடிக்கொண்டிருக்கும் தேசிய முன்னணி
மட்டமான நடவடிக்கைகளில் துணிந்து
இறங்கும். மக்கள் மனம் தளராமல் நம்பிக்கை
கூட்டணியை ஆதரித்து வெற்றி
காண வேண்டும். அநீதிக்கு,
அதர்மத்திற்கு, ஊழலுக்கு, நாணயமற்ற
ஆட்சிக்கு முடிவு கட்டுங்கள்.
புது அரசியல் சகாப்தம்
உருவெடுக்க வழி காட்டுங்கள்.
எல்லா மலேசியர்களும் தன்மானத்துடன் வாழ புது அரசியல்
கோட்பாட்டை காண்போம். புது மலேசியாவை காண்போம்.
கி.சீலதாஸ்.
No comments:
Post a Comment